பள்ளி மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..
அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முகாமிட்டு இன்று (18.12.2024) கள ஆய்வு மேற்கொண்டார். மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய தினம் (18.12.2024), திருவாரூர் மாவட்டத்தில் 2024 டிசம்பர் மாதத்திற்கான முகாம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் காலை 9.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் ஊராட்சி, சூரனூர் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் குறித்தும், பள்ளி வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.