கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு செல்லும் நுழைவாயில் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான தபால் நிலையம் உள்ளது. மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தபால் நிலையம் சுசீந்திரம், கற்காடு, தேரூர், தேவ குளம் உள்ளிட்ட கிராமங்களில் தலைமை நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலை நிலையம் முன்பு பட்டுப்போன நிலையில் மாமரம் ஒன்று காணப்பட்டது. மேலும் பயணிகள் பேருந்து நிறுத்தம், சுசீந்திர மேல்நிலைப் பள்ளியும் அருகருகே உள்ளது. பஸ் ஏறுவதற்காக பள்ளி மாணவ மாணவிகள் இந்த கட்டிடம் முன்பு தான் நிற்க வேண்டும். எனவே ஆபத்தான நிலையில் நின்ற மாமரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதை எடுத்து இந்த மாமரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நேற்று (17-ம் தேதி) நடைபெற்றது. பாதுகாப்பாக மரம் முழுவதும் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்களும் பயணிகளை நிம்மதி அடைந்தனர்.