விலைப்படி உயர்வு வழங்க கோரி போக்கு​வரத்து ஓய்வூதியர் போராட்​டம், சாலை மறியல்

அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரை ஆடை போராட்டம், சாலை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Update: 2024-12-18 05:57 GMT
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி சென்னை, பல்லவன் சாலையில் அரை ஆடை போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்துமாறும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வழி செய்யப்படும் எனவும் காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சங்கத்தின் தலைவர் டி.கதிரேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News