இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணி செயல் இழந்து காணப்படுவதால் சாக்கடை நகராக மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்செந்தூர் நகராட்சியில் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் சரிவர நிறைவேற்றப்படாததால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சேனல்கள் வழியாக மலம் கலந்த கழிவுநீர் சாக்கடையாக ஆளாக முக்கிய சாலைகளிலும் தெருக்களிலும் ஒடுகிறது. இதனால் நகரில் துந்நாற்றம் வீசுகின்றது. இதனால் நகரில் பல்வேறு உயிர்கொல்லி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக திருச்செந்தூர் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் புன்னிய சுற்றுலா ஸ்தலமாகும். இங்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் டி.பி.ரோடு, சன்னதி தெரு, கோவில் பஸ்நிலையம் செல்லும் சபாபதிபுரம் தெரு போன்ற முக்கிய சாலைகளில் பாதாள சக்கடை உடைப்பு ஏற்பட்டு சேனல்களில் துர்நாற்றத்துடன் மலம் கலந்து ஆறாக ஒடுகின்றது. பக்தர்கள் இதில் மிதித்து நடந்து செல்கின்றனர். மேலும் இது குறித்து பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர். மாணவர் இயக்கங்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி சிறப்பாக நடைபெறாததாலும் தரமற்ற பணிகளாலும்ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் சேனல் மூடிகள் உடைந்து காணப்படுகின்றது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் வேதனை அடைவதுடன் அதிருப்தியில் உள்ளனர்.