கடையநல்லூர் கோட்ட மின் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது
கோட்ட மின் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து கோட்ட மின் பயனீட்டாளர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பங்கேற்று அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகர் சுந்தரம் மற்றும் ஏனைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஏராளமான மின் பணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.