விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சப் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் காவணிப்பாக்கம் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்சர் பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.அவர்கள் வைத்திருந்த பார்சலில், 1.900 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ராம்ஜி,19; ரஜினி மகன் நவீன்,19; என தெரியவந்தது. உடன் பைக், கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், கைதானவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.