வாசுதேவநல்லூர் அருகே பூலித்தேவர் வாரிசு தாரர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு
பூலித்தேவர் வாரிசு தாரர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் அமைந்துள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவர் வாரிசு தாரர்களுக்கு தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மாமன்னர் பூலித்தேவர் மாளிகை என பெயர் வைக்க வேண்டும் என்றும் கோரி சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு & பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரிடம் வாரி சுதாரர் துரை சூர்யபாண்டியன், மாரி பாண்டியன் ஆகியோர் மனு வழங்கினர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.