ஈரோடு சோலார் பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலைய வளாகத்தில் நாளை மறுநாள் (டிச.20) நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ஏற்கனவே நிறைவு பெற்ற வளர்ச்சித் திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் , பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்நிலையில், இவ்விழாவுக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.