மாநகரில் வெள்ளம் தடுக்கப்பட்டுள்ளது : மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

Update: 2024-12-18 13:51 GMT
தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசியதாவது "தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த மழையால் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக நகருக்குள் மழை வெள்ளம் வருவதை தடுத்து மடத்தூர் கோக்கூர் கண்மாய், கோரம்பள்ளம் குளம், உப்பாற்று ஓடை வழியாக கடலுக்குள் தண்ணீர் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் சிறிய அளவு தான் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பி அன் டி காலனி, கதிர்வேல் நகர் முத்தம்மாள் காலனி உட்பட சில பகுதிகளில் தேங்கிய தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் காவல்வாய்களில் அதிகளவில் கேரி பேக், பாட்டில்கள் அடைத்து நின்றதால் தண்ணீர் செல்ல முடியவில்லை. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் துரிதமாக கஷ்டப்பட்டு அவற்றை அகற்றி தண்ணீர் செல்ல வழி வகுத்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அப்பகுதி மக்களுக்கு சொல்கிறேன் தயவு செய்து இனிமேல் கேரி பேக் பாட்டில்களை குப்பைத் தொட்டியில் போடுங்கள் அல்லது குப்பை வண்டி வரும்போது அவர்களிடம் கொடுங்கள். மேலும் தூத்துக்குடி மாநகரக்குள் தெருக்களின் தேங்கி நின்ற தண்ணீர்கள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடியில் 200 ஏக்கரில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்டப்டு வருகிறது. மேலும் காலி மனைகளில் நீரை அகற்றவும் அதன் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இவ்வாறு மேயர் பேசினார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டார். இதில் இறப்பு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த 2பேருக்கு 5 நிமிடத்தில் இறப்பு சான்றிதழ் ஆணை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சரவணகுமார், துணை மாநகர பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல ஆணையர் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், இரவின் ஜெபராஜ், சுகாதார அலுவலர் நெடுமாறன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஏடிண்டா, சரண்யா, மும்தாஜ், ரீக்டா ஆர்தர், ராம், தனலட்சுமி, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, வட்டச் செயலாளர் கதிரேசன், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News