காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்.

மதுரையில் இன்று மாதாந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-18 13:58 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் இன்று (டிச.18) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 51 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர்(தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியயோர் உடனிருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News