தெற்கு வாசலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
மதுரை தெற்கு வாசல் பகுதியில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது
மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (டிச.18) மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வணங்கினர் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன இதற்கான ஏற்பாடுகளை முருகன், கண்ணன், முருகவேல், பூசாரி குமார்,வேலு, கார்த்திக், பாலா ஆகியோர் செய்திருந்தனர்.