கரிவலம்வந்தநல்லூர் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது
அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் முட்புதர்கள் மற்றும் செடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்து இருப்பதாலும் அந்த இரவு நேரத்தில் விஷச்சந்துக்கள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அப்பகுதி முழுமைக்கும் மருந்து தெளித்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பழனிவேல் ராஜன் மற்றும் லட்சுமி உரக்கடை ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் மருத்துவர்களும் இணைந்து அதற்கான மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.