உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோயில் தீர்த்தக்குளம் முழு கொள்ளளவை எட்டியதால் பக்தர்கள் மகிழ்ச்சி.செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் .செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் .

உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோயில் தீர்த்தக்குளம் முழு கொள்ளளவை எட்டியதால் பக்தர்கள் மகிழ்ச்சி.செல்போனில் படம் எடுத்தும் உற்சாகத்தில் திளைத்தனர்.

Update: 2024-12-18 14:58 GMT
அரியலூர், டிச.18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பயறணீஸ்வரர் கோயில். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். இந்த கோவில் உடையார்பாளையம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் நான்கில் ஒரு பகுதி முழுவதுமாக கோவிலின் தீர்த்த குளம் காண்டிப தீர்த்த குளம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது. மேலும் இந்த கோவிலில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அரண்மனை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களும் படமாக்கப்பட்டுள்ளது.கோவிலில் வெளிப்பகுதியில் 100 கால் மண்டபம் உள்ளது. இவற்றை பார்த்தவுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு வரும் பயணிகள் இந்த மண்டபம் தூண்களில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். தற்பொழுது  பெய்த மழையின் காரணமாக இந்த தீர்த்த குளத்தில் நிரம்பி உள்ள நீரானது கடல் போல் ரம்யமாக காட்சி அளிக்கிறது. இதனை பலரும் பார்வையிட்டு ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Similar News