ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தங்க செயின் பறித்த இருவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தங்க செயின் பறித்த கொண்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர், டிச.18- ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்றதால் கழுத்தில் ஏற்பட்ட காயங்களுடன் பாதிக்கப்பட்ட பின் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் இருவரை ஜெயங்கொண்ட போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த பிரேம்ஜோசப் என்பவரது மனைவி குழந்தை தெரஸ் (37). இவர் கடந்த 9-ந் தேதி ஜெயங்கொண்டத்திலிருந்து விழப்பள்ளம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சின்னவளையம் பெட்ரோல் பங்க் வேகத்தடை அருகே செல்லும்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் குழந்தைதெரஸ் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறித்து விட்டு வேகமாக கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குழந்தைதெரஸ் தாலி செயினை பறித்ததால் கழுத்தில் ஏற்பட்ட காயங்களுடன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் தேடி வந்த நிலையில் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் நேற்று ஜெயங்கொண்டம் -பெரியவளையம் பைபாஸ் சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார் அப்போது அப்படியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் லால்பேட்டை தைக்காலை சேர்ந்த அப்துல் அலீம் மகன் முகமது பைத் (24), அதே பகுதி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முகமது ரபிக் மகன் முகமதுஷாஜகான் (22) என்பதும இவர்கள் இருவரும் குழந்தைதெரஸ் தாலி செயின் பறித்துக் கொண்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் நம்முடைய முகமதுபாரிக, முகமது ஷாஜகான் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.