ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம் குறித்து வாகன பிரச்சாரம்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம் குறித்து வாகன பிரச்சாரம்.

Update: 2024-12-18 15:07 GMT
பரமத்தி வேலூர், டிச.17: மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சேலம் நாமக்கல்- மாவட்டம் மாவட்டம் சார்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல கருத்தடை சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் வருகின்ற 21ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாமில் பயிற்சி பெற்ற மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படும், சிகிச்சை எளிமையானதும் பாதுகாப்பானதுமாக இருக்கும் எனவும், சிகிச்சை பெறுவோர் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையைக் காட்டிலும் ஆண்களுக்கான எளிதான நவீன கருத்தடை சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ் துறை மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.1100, ஊக்க அன்பளிப்பு தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனப் பிரச்சாரத்தில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ( பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Similar News