ராசிபுரத்தில் புதிய பல் மருத்துவமனையை முன்னாள் அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
ராசிபுரத்தில் புதிய பல் மருத்துவமனையை முன்னாள் அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் ராஜா பல் மருத்துவமனையானது புதிதாக கட்டப்பட்டு தற்போது திறப்பு விழாவானது நடைபெற்றது.விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய மருத்துவமனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, புதிய இயந்திரத்தை செயல்பாட்டிற்கு அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். பல் மருத்துவமனை மருத்துவர் யோகேஷ் சிறப்பாக செயல்பட வேண்டும் என பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ராதா சந்திரசேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், பேரூர் கழக செயலாளர்கள்,மற்றும் கட்சி நிர்வாகிகள் , குடும்ப உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..