கடையநல்லூரில் முள் செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை
முள் செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து கருப்பா நதி உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் பளியர் இன மக்களும் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலையின் இருபுறமும் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு எனவே முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகது.