அரிட்டாபட்டி மக்களை சந்தித்த ஹைதர் அலி.
மதுரை அருகே அரிட்டாபட்டி மக்களுக்கு ஆதரவு தெரிவித்த மக்களை ஹைதர் அலி நேரில் சந்தித்து பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டிக்கு நேற்று (டிச.17) ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வருகை தந்தார். தமிழக அரசின் மேனாள் வக்ஃபு வாரியத் தலைவரும், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான செ. ஹைதர் அலி அவர்கள் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை அரிட்டாபட்டி மண்ணில் வரவிடக் கூடாது. மக்கள் அனைவரும் சாதியாக, சமயமாக இன்னும் என்ன பிரிவினைகள் உள்ளதோ அவற்றை எல்லாம் கடந்து நாம் அனைவரும் தமிழர்கள் எனும் ஒரே அணியமாக ஒன்றிணைந்து இந்த நாசகார டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து இந்த மண்ணில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, மாந்த இனம் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிடும் சுழல் இருப்பதாக உலகின் பல்வேறு நிறுவனங்களின் ஆய்வுகள் கூறுவதை சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினார். மேலும் சுற்றுச் சூழல் மட்டுமல்லாது, நமது பண்பாட்டையும், வாழ்வியல் அடையாளங்களையும் சிதைக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்த்துக் களமாடுவதில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முன்களத்திலே நிற்கும் எனும் உறுதியையும் மக்களுக்கு வழங்கினார்.