சங்கரன்கோவிலில் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் ஒரு மல்லிகை ரூ.1000 முதல் ரூ.1250 வரை விற்பனையாகிறது. கனகாம்பரம் ரூ.800க்கும், பிச்சிப்பூ ரூ.550க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக வருங்காலத்தில் பூக்கள் விலை மேலும் உயரக்கூடும் என்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.