காவேரிப்பாக்கம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
திருமணம் ஆகாத இடத்தில் வாலிபர் தற்கொலை!
காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவரது மகன் மகன் ரஞ்சித் (வயது 22). இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. நேற்று ரஞ்சித் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவரை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ரஞ்சித்தின் தாய் சுமதி நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.