குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப்போட்டி.
குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப்போட்டி.
குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப்போட்டி. அனைத்துதுறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள்,தனியார் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ITI நிறுவன ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி 28.12.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் கரூர் மாவட்டத்திலிருந்து கலந்துகொள்ளும் 9 போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் எழுத்துத்தேர்வு 21.12.2024 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கரூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தபோட்டி 1 மணிநேரம் எழுத்துத்தேர்வு போட்டியாக நடைபெறும். 50 வினாக்கள் கொண்ட multiple Choice (4 விடைகள்) கொண்ட எழுத்துத்தேர்வு ஆகும். "இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் இணைப்பு Google Link மூலம் 19/12/2024 வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி நடைபெறும் மையத்தில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்களது அலுவலக,பள்ளி அடையாள அட்டையை தேர்வுமைய அறைக்கண்காணிப்பாளரிடம் கட்டாயம் முன்னிலைப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் நடைபெறும் எழுத்துதேர்வில் முதல் 9 இடங்களைப் பெற்றவர்கள், 3 பேர் கொண்ட 3 குழுக்காளாக 28/12/2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கப்படுவார்கள். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.5 இலட்சம். மூன்றாவது பரிசு.ரூ.1 இலட்சம் வழங்கப்படும். சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ.25,000 மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச்சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம், சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு கரூர் மாவட்டம் வே.சரவணன், மாவட்டஆட்சியரின்நேர்முகஎழுத்தர் (கல்வி) - 9943702300 கி.சிவராமன் ,உதவித்திட்டஅலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி– 9788858701. இராதமிழ்ச்செல்வி, முதன்மைக்கல்விஅலுவலரின்நேர்முகஉதவியாளர்(இடைநிலை)-7373003102 ப.சக்திவேல்,முதன்மைக்கல்விஅலுவலரின்நேர்முகஉதவியாளர்(மேல்நிலை)- 7373003103.