மாணவர்கள் பயன் பெற அறிவியல் ஆய்வு மையம்.
மதுரையில் அறிவியல் ஆய்வு மையத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தலைமையில் கையெழுத்திடப்பட்டது.
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பழைய ஜெயில் ரோடு பகுதியில், அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் இயற்பியல், வேதியியல், உயிரியல் சோதனைகளுக்கான ஆய்வகங்கள், மின்சார-இயந்திர மாதிரிகளை உருவாக்குவதற்கான ஆய்வுக்கூட வசதிகள், உலகளாவிய அறிவியல் மேம்பாடுகள் மற்றும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய தரவுகள் அடங்கிய ஓர் ஆய்வு மையத்தை, பினாக்கல் இன்போடெக் நிறுவனத்தின், அங்கூரான் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து, ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில், 0.56 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் அங்கூரான் நிறுவன முதன்மை செயல் இயக்குநர் விமல் குமார் பட்வாரி இடையே, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.