மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விவசாய்.!
நிலக்கடலை உற்பத்தி மானியமாக அறுவடை காலத்தில் ரூ.75,000/- இலாபம் கிடைக்கும் பயனடைந்த விவசாயி ரா.நடேசன் அவர்கள் பெருமிதம்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 18.12.2024 அன்று வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைகளின் சார்பில் அரசு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் விவசாயிகளுடன் கலந்துரையாடி, வேளாண் விளை நிலங்களின் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமகிரிப்பேட்டை வட்டாரம், ஆசாரித் தோட்டத்தில் விவசாயி திரு.ரா.நடேசன் அவர்கள் தனது 3 ஏக்கர் நிலப்பரப்பில் 240 கிலோகிராம் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளதை பார்வையிட்டு, நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் மாவட்ட ஆட்சியர் விவசாயுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயி அவர்கள் டி.எம்.வி-14 ரக நிலக்கடலை விதையை என்.எம்.ஈ.ஓ எண்ணெய் விதைகள் திட்டத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.40.00 மானியத்தில் 240 கிலோ விதை ரூ.9,600/- மானியத்தில் வேளாண்மை துறையினர் வழங்கி உள்ளதாகவும், நிலக்கடலை அறுவடை காலம் 110 நாட்கள் எனவும், தற்போது இப்பயிர் 40 நாள் பயிராக உள்ளதாகவும் தெரிவித்தார். இவ்விதைப்பண்ணை மூலம் சுமார் 3,000 கிலோ நிலக்கடலை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், இதன் மூலம் உள்ளூர் சந்தை மதிப்பில் ரூ.30,000/- இலாபமும், உற்பத்தி மானியமாக கிலோ ஒன்றுக்கு ரூ.25/- வீதம் மொத்தம் ரூ.75,000/- கிடைக்கும் எனவும் இத்தகைய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகள் நலன் காக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார். நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் நிலக்கடலை கொள்முதல் இலக்காக 50 மெட்ரிக் டன் நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் பருவத்தில் காரீப் பருவத்தில் இதுவரை 37 மெட்ரிக் டன் விதை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 10 விவசாயிகள் நிலக்கடலை விதைப்பண்ணை, 6 விவசாயிகள் நெல் விதைப்பண்ணை, 7 விவசாயிகள் சிறுதானிய விதைப்பண்ணை மற்றும் 6 விவசாயிகள் பயிறுவகை விதைப்பண்ணை அமைத்து பயனடைந்து வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் நெல் 48 எக்டர் பரப்பளவில் 50 பண்ணைகள், சிறுதானியம் 70 எக்டர் பரப்பளவில் 70 பண்ணைகள், பயிறுவகை 262 எக்டர் பரப்பளவில் 328 பண்ணைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் 304 எக்டர் பரப்பளவில் 332 பண்ணைகள் என மொத்தம் 684 எக்டர் பரப்பளவில் சுமார் 780 விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நாமகிரிப்பேட்டை, தண்ணீர் பந்தல் காடு பகுதியில் வாழை தோட்டத்தினை பார்வையிட்டு விவசாயி திரு.மாணிக்கம் அவர்களுக்கு ஒரு ஹெக்டர் பரப்பிற்குரிய வாழைதார் உறை வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, வாழைத்தார் உறை பயன்பாடு குறித்து நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் மாவட்ட ஆட்சியர் விவசாயுடன் கலந்துரையாடினார். விவசாயி வாழைத்தார் உரை பயன்படுத்துவதன் மூலம் நோய் தாக்குதல் பூச்சிகள் மற்றும் பறவைகள் தாக்குதல் இன்றியும், வாழைப்பழத்தில் புள்ளி நோய் வராமலும் காக்கப்படுகிறது. இதனால் வாழைப்பழம் தரம் உயர்த்தப்பட்டு வெளிசந்தையில் அதிக விலை கிடைக்கப் பெறுகிறது என விவசாயி அவர்கள் தெரிவித்தார். நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 2024-25-ஆம் ஆண்டு செயல்படுத்தும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வாழைப்பழத்தின் தரத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு வாழைத்தார் உறை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டர் பரப்பிற்கு 50 சதவிகிதம் மானியமாக ரூ.12,500/- வழங்கப்படுகிறது. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 5 ஹெக்டர் இலக்கு சாதனையாக்கப்பட்டு 6 விவசாயிகள் பயனடைந்துளள்ளனர்.