அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.83 கோடி.

டிசம்பா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

Update: 2024-12-19 23:43 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.83 கோடி ரொக்கம், 164 கிராம் தங்கம், 1,020 கிராம் வெள்ளியை பக்தா்கள் செலுத்தியிருப்பது தெரியவந்தது. அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, மாதந்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில், ரூ.2 கோடியே 83 லட்சத்து 92 ஆயிரத்து 520 ரொக்கம், 164 கிராம் தங்கம், 1,020 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததால் உண்டியல் காணிக்கைப் பணம் அதிகமாக வந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட சில உண்டியல்களில் சேகரமாகி இருந்த காணிக்கை பணம் மட்டுமே வியாழக்கிழமை எண்ணப்பட்டது. மீதமுள்ள உண்டியல்களை எண்ணும் பணியை வரும் 30-ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

Similar News