திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி சிதலம் அடைந்து காணப்படுகின்றது. சிறு மழைக்கே சாலைகளில் இவ்வாறு தண்ணீர் தேங்குவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.