சாலை குடிநீர் மின்விளக்குகள் மயானம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி வாழத் தகுதியற்ற நிலையில் உள்ள கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனை குரல்
சாலை குடிநீர் மின்விளக்குகள் மயானம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி வாழத் தகுதியற்ற நிலையில் உள்ள கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனை குரல்
திருச்சுழி அருகே சாலை குடிநீர் மின்விளக்குகள் மயானம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி வாழத் தகுதியற்ற நிலையில் உள்ள கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனை குரல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட நாடாகுளம் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் வசிக்கும் இந்த கிராமத்தில் மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில் சாலை, குடிநீர், மயானம், மின்விளக்குகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இன்றி அப்பகுதி மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் வசதி இன்றி அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் கிராமத்தின் வெளியே உள்ள கிணற்றில் தண்ணீர் இறைத்து பருகி வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி இடிந்து விழும் சூழலில் உள்ளது. இந்த கிணற்றில் உள்ள குடிநீர் தற்போது மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது ஆனால் பொதுமக்கள் அந்த நீரை தான் வேறு வழியின்றி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். அசுத்தமான இந்த குடிநீரை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. மின் கம்பங்கள் அனைத்தும் மின்விளக்குகள் இல்லாமல் பொதுமக்களே பல்புகள் வாங்கி மின் கம்பத்தில் பொருத்தியுள்ளனர். அதுவும் பல நேரத்தில் தெரியாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் சுமார் மூன்று லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியல் தொட்டி தண்ணீர் வசதியின்றி பயன்பாடு இன்றி குடிமக்களின் கூடாரமாக மாறி உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கால்களை கிழிக்கும் வகையில் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று தான் பேருந்து பிடித்து வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்த கிராமத்தில் மயான வசதி கூட இல்லாமல் இறந்த சடலங்களை வயல் வெளிகள் மீது நடந்து சென்று அங்குள்ள திறந்த வெளியில் ஒரு மேடான பகுதியில் வைத்து எரியூட்டும் அவல நிலை உள்ளது. மயான வசதி கூட இல்லாத அவலமான நிலையில் இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி நான்கு நிலத்தடி நீர் போர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த போர்களில் உள்ள மோட்டர்கள் அனைத்தும் பழுதடைந்து தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்படாமல் திறந்த நிலையிலே உள்ளது. எந்த ஒரு சிறிய அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் இந்த நாடாகுளம் கிராமம் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி மடம் ஊராட்சிக்கு உட்பட்ட நாடாகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் பகுதியை புறக்கணித்து வருகின்றனர் எங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை மயான வசதி சாலை வசதி நல்ல குடிநீர் மின்விளக்குகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிக்கு நேரில் ஆய்வு செய்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மிகுந்த சிரமமான சூழலில் நாங்கள் வசித்து வருகிறோம் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.