பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் கேக்

புதிய வகை பிளம் கேக் மற்றும் பலகாரங்கள் அறிமுகம்;

Update: 2025-12-19 04:44 GMT
அஸ்வின்ஸ்-ல் கிறிஸ்துமஸ் கேக் சிறப்பு விற்பனை... புதிய வகை பிளம் கேக் மற்றும் பலகாரங்கள் அறிமுகம்! பெரம்பலூர் அஸ்வின்ஸ்-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கேக் விற்பனை தொடங்கியுள்ளது. ரூ.39-ல் தொடங்கும் மினி பிளம் கேக் பாக்கெட்டிலிருந்து ரூ.399 வரை பல வகையான கேக் மற்றும் பலகார பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பலூர் தலைமையிடமாகக் கொண்டு 40-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தமிழகம், புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸை முன்னிட்டு புதிய வகை பிளம் கேக் மற்றும் பலகாரங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் குறைந்த விலையிலிருந்து பிரிமியம் வரை பல்வேறு கிறிஸ்துமஸ் சலுகைகளை அறிமுகம் செய்து உள்ளனர். ரூ.39-ல் தொடங்கும் மினி பிளம் கேக் பாக்கெட்டிலிருந்து ரூ.399 வரை பல வகையான கேக் மற்றும் பலகார பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 40 கிளைகளிலும் கிடைக்கும் இச்சலுகைகளில், பிளம் கேக், ஓட்ஸ் குக்கீஸ், நைஸ் மைசூர்பாக், அதிரசம், கைமுறுக்கு, மினி தட்டை உள்ளிட்ட ஏழு வகை பலகாரங்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் பாக்கெட்டுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது . மேலும், பிரிமியம் கேம்பர்கள், நட்ஸ் கலெக்ஷன், ஸ்பெஷல் கிப்ட் பாக்ஸ் போன்ற பல்வேறு தேர்வுகளும் ரூ.475 முதல் ரூ.1799 வரை விலைப்பட்டில் உள்ளன. இவ்வாறு அனைவருக்கும் ஏற்ற வண்ணம் பல வகையான கிறிஸ்துமஸ் சலுகைகளை இந்த ஆண்டு அஸ்வின்ஸ் வழங்கி வருகிறது. நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை துறை தலைவர் குணா செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்ததோடு, பெரம்பலூர் கிளையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய கிறிஸ்துமஸ் சலுகைகள் வழங்குவதைத் தொடங்கி வைத்தார்.அஸ்வின்ஸ் கேக்குகளுடன் பண்டிகையை கொண்டாடி மகிழுமாறு அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் டாக்டர் கேஆர்வி. கணேசன் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News