குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் மனநல ஆலோசகர் ஆலோசனை
கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு;
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் உயர்கல்வித்துறை மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் மனநலம் மற்றும் தற்கொலை தடுப்புக் குழு சார்பில் மாணவர்களிடையே தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குளித்தலை மனநல ஆலோசகர் மகேஸ்வரி விழிப்புணர்வு உரையில் மாணவர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை கண்டு துவண்டு போய்விடுகிறார்கள் சின்ன சின்ன எதிர்ப்புகளை கூட தாங்க முடியாமல் தவிக்கிறார்கள் வாழ்க்கை என்பது மிகப் பெரிய பயணம் என்பதை உணராமல் திடீரென்று தற்கொலை மற்றும் போதை போன்ற நிகழ்விற்கு மனதை மனமாற்றம் செய்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள் மாணவர்கள் தங்களின் வாழ்வின் வலிமையையும் மன உறுதி மற்றும் பெற்றோர் குடும்பத்தார் போன்றவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து வாழ்வதுடன் வாழ்க்கை என்பது மிகவும் சுவாரசியமானது இன்பம் துன்பம் இவை எல்லாம் கடந்து செல்லக்கூடியது என்பதை உணர்ந்து வாழ்க்கை பற்றிய சரிதான புரிதலுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் போன்றோரின் அறிவுரைகளை கேட்டு நடந்திட வேண்டும் என்று கூறினார் இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர் இதில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதனைத் தொடர்ந்து வாழ்க்கை மற்றும் மன உறுதி குறித்த உறுதிமொழி மாணவர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டு மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.