தொலைத்தொடர்பு அமைச்சரிடம் தர்மபுரி எம். பி. ஆ. மணி மனு

செல்போன் கோபுரங்கள் அமைக்க கோரிக்கை;

Update: 2025-12-19 02:40 GMT
திமுக
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி B.Com., B.L., அவர்கள் ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சர் மாண்புமிகு M.ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை நேரில் சந்தித்து தர்மபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய தாலுக்காக்களில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை இல்லாமலும், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புக்கு இன்டர்நெட் சேவை மிகவும் மந்தமாக இருப்பதாலும் உடனடியாக செல்போன் கோபுரங்கள் (டவர்) இல்லாத இடங்களில் புதிய செல்போன் கோபுரங்கள் (டவர்) அமைத்து தரும்படியும், இன்டர்நெட் சேவை மிகவும் குறைவாக இருக்கும் இடத்தில் அதை மேம்படுத்தி தருமாறும் தர்மபுரி மாவட்ட மக்களின் சார்பாக கோரிக்கை மனுவினை அளித்தார் தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்த வேண்டி கோரிக்கை வைத்த இடங்களின் விவரம் பின்வருமாறு, காரிமங்கலம் தாலுகா: ஜிட்டான்டஅள்ளி ஊராட்சி (மதகேரி) ஜக்கசமுத்திரம் ஊராட்சி (மாரவாடி, போடரஅள்ளி) தர்மபுரி தாலுகா: தொப்பூர் கணவாய் மற்றும் அதை சுற்றியுள்ள வனப் பகுதிகள் பென்னாகரம் தாலுக்கா: கூகுட்டமருதள்ளி ஊராட்சி (முதுகம்பட்டி), பெரும்பாலை ஊராட்சி (சாமத்தாள்), தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி (சீலநாயக்கனூர்) அஜ்ஜனள்ளி ஊராட்சி (சின்னப்பநல்லூர்), அரூர் தாலுக்கா: வேடகட்டமடுவு ஊராட்சி ( கருங்கல்பாடி) சிட்லிங் ஊராட்சி (வேலனூர்) கீரைபட்டி ஊராட்சி ( வள்ளி மதுரை) ஆகிய இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக உடனடியாக செல்போன் டவர்கள் அமைக்க வேண்டுமென கோரிக்கை மனுவினை வழங்கினார்.

Similar News