புதுக்கோட்டை பூ மார்க்கெட் அருகே உள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
புதுக்கோட்டை பூ மார்க்கெட் அருகே உள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி;
இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது அதனை ஒட்டி இன்று புதுக்கோட்டை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் கூடி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கோவிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு 10க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது இதில் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் தயிர் அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் என பல்வேறு அபிஷேகங்கள் செய்வதை 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு ரசித்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.