சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-12-20 10:26 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற இருக்கும் வழக்கறிஞர்கள் மாநாடு பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினர். இந்த வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சங்கரநாராயணன் சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, வழக்கறிஞர் அமைப்பு தலைவர் சந்தன பாண்டியன், வழக்கறிஞர் அமைப்புச் செயலாளர் பிச்சையா, மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மருதப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Similar News