விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி தெற்கு கோட்ட மேலாளர் ஆய்வு
பாதுகாப்பு பணி தெற்கு கோட்ட மேலாளர் ஆய்வு
தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று மதியம் 12:30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தவர், விபத்து காலங்களில் மீட்பு பணிக்காக கொண்டு செல்லும் அவசர கால பாதுகாப்பு ரயிலில் ஏறி பார்வையிட்டு, பராமரிப்பு நிலை குறித்து கேட்டறிந்தார்.பின், தண்டவாளங்களின் உறுதி தன்மை மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாலை 4:45 மணிக்கு திருச்சி புறப்பட்டு சென்றார்.ஆய்வின் போது, மூத்த கோட்ட பொறியாளர் அஜய்குமார் மீனா, மெக்கானிக்கல் பிரிவு மூத்த கோட்ட பொறியாளர் பர்னாபாஸ், கூடுதல் கோட்ட பொறியாளர் சுரேஜெகதீஸ், உதவியாளர் சண்முகராஜா, கட்டுமான பணி பொறியாளர் கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.