கோட்டகுப்பம் அருகே விபத்தில் பெண் உயிர் இழப்பு
விபத்து குறித்து போலீசார் விசாரணை
கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு, 75; இவர், நேற்று முன்தினம் பெரிய முதலியார்சாவடி மெயின் ரோட்டில், நடந்து சென்றவர் இ.சி.ஆரில் இருந்து ெரிய முதலியார்சாவடி சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, சென்னை மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி சென்ற பைக், சாமிக்கண்ணு மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.