மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கை அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது அம்பேத்காரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அமித்ஷா பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் சிவகங்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு அம்பேத்கர் படத்தை ஏந்தியபடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.