டூவீலர் திருட்டு போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் டூவீலர் திருடப்பட்டதால் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.;

Update: 2026-02-07 11:53 GMT
குமாரபாளையம் குளத்துக்காடு செந்தில் மில் அருகே வசிப்பவர் சிவக்குமார், 33, கட்டிடக் கூலி. இவர் தனது பல்சர் டூவீலர் வாகனத்தை, தனது வீட்டின் முன்பு, பிப். 3 இரவு 11:00 மணியளவில் நிறுத்தி பூட்டி விட்டு, தூங்க சென்றார். நேற்றுமுன்தினம் அதிகாலை 05:00 மணிக்கு வந்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இது குறித்து சிவக்குமார், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News