பிளெக்ஸ் உரிமையாளர்களுடனான போலீசாரின் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனனில் பிளெக்ஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.;
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனனில் பிளெக்ஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது: \குமாரபாளையம் நகரில் ஆங்காங்கே பல பிளெக்ஸ் போர்டுகள வைக்கப்பட்டுள்ளன. பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, போலீஸ் ஸ்டேஷன் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, கவுரி தியேட்டர் பிரிவு, கே.ஓ.என். தியேட்டர் பிரிவு, காவேரி நகர் உள்பட பல இடங்களில் ஒவ்வொரு பிளெக்ஸ் நிறுவனத்தார் தங்கள் பிளெக்ஸ் போர்டுகள் வைக்க இடம் பிடித்து மூங்கில்களை கட்டி வைத்துள்ளனர். இதில் மர பிரேம்களை கட்டி வைத்து உள்ளனர். வைக்கப்பட்ட பிளெக்ஸ்களை பிரேமுடன் அகற்றாமல், பிளெக்ஸ் மட்டும் சிலர் அகற்றி வருகின்றனர். இதனால் சாலையோரமாக இருக்கும் பிரேம்கள், சாலைகளில் வாகனங்களில் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களின் கண்களுக்கு தெரிவது இல்லை. இதனால் இதில் மோதி நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. ஆகவே, மூன்று நாட்கள் கழித்து, பிளெக்ஸ் உடன் பிரேம்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியினர் அடிக்கும் பேனர்களில் பிளெக்ஸ் நிறுவன பெயர்கள் இருக்க வேண்டும், நகராட்சி அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும், சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் அரசியல் கட்சியினர் பிளெக்ஸ், கண்ணீர் அஞ்சலி பிளெக்ஸ் உள்ளிட்டவைகளை வைக்க கூடாது. சாலையோரமாக, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடங்களில் மட்டும் வைக்க வேண்டும். பிளெக்ஸ் இல் இடம்பெறும் வாசகங்கள் பிறர் மனம் புண்படும் படி இருக்க கூடாது. தேர்தல் விதிமுறைப்படி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.