கோவை: முன்னாள் எம்பி மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி !
கோவையில் மறைந்த திமுக முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவையில் திமுக முன்னாள் எம்பி இரா.மோகன் (81) கடந்த 10-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.இந்நிலையில் ஈரோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இன்று கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை இராமநாதபுரத்தில் உள்ள மறைந்த இரா.மோகன் இல்லத்திற்கு வந்து, இரா.மோகனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இரா.மோகன் அவர்களின் மனைவி சுகுணா, மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.