விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்;
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இப்பேரணிக்கு கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார், வட்ட வழங்கல் அலுவலர் அனுசியா, பேராசிரியர்கள் ஹெலன் ரூத் ஜாய்ஸ், பரமசிவம், சுந்தரச் செல்வன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெக்மூத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரியில் தொடங்கப்பட்ட இப்பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விருத்தாசலம் பேருந்து நிலையம் வரை சென்றனர். அப்போது நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படியும் ஊர்வலமாக சென்றனர்.