பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர்  சுருண்டு விழுந்து உயிரிழப்பு 

தக்கலை

Update: 2024-12-20 10:14 GMT
குமரி மாவட்டம் தக்கலை அருகே வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் ஜெனிஸ் (22). டிப்ளமோ படித்து விட்டு ராமேஸ்வரத்தில் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று (19-ம் தேதி) இரவு ஜெனிஸ் வேலை முடித்து தனது வீட்டிற்கு வர திட்டமிட்டு, அவர் ராமேஸ்வரத்தில் இருந்து பஸ் ஏறி அழகியமண்டபம் பகுதிக்கு வந்தார். திடீரென பஸ் நிறுத்தத்தில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.       இதனால் அந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தார். ஆனால் அப்படியே மயங்கி சரிந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொது மக்கள் இதனை கண்டு உடனடியாக தக்கலை  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் வந்து ஜெனிசை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.        அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது ஜெனிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்.  இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பால் இறந்தாரா? வேறு காரணமா? என விசாரணை நடக்கிறது.

Similar News