முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வகையில் சாதனை புரிதலுக்காக பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. கற்றலின் மூலம் பல்வேறு திறன்களை அறிய முடியும் எலன் மாஸ் முதல் பல்வேறு சாதனை புரிந்தவர்கள் தினசரி கற்றலை மேற்கொள்கின்றனர் ஆகையால் உங்கள் வாழ்க்கை வளமாக கற்றலை அவசியமாக்குங்கள் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் அசோக் குமார் வரவேற்றார். முடிவில் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பழனிநாத ராஜா நன்றி கூறினார்.