சங்கரன்கோவிலா அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் திருவேங்கடம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவேங்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவேங்கடம் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் அய்யனார் என்பவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அய்யனார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.