கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு - போலீசில் புகார்

குலசேகரம்

Update: 2024-12-20 10:19 GMT
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பிணந்தோடு என்ற பகுதியில் தனியார் தோட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையால் அந்த பகுதியில்  சுகாதார கேடு ஏற்படுவதால், பண்ணையை அகற்ற அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.         இந்த நிலையில் இன்று (20-ம் தேதி)  காலை கல்லூரி மாணவி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பால் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நபர் ஒருவர் கல்லூரி மாணவி மீது பன்றி கழிவுகளை வீசியுள்ளார்.         இதை மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக பெற்றோர் , உறவினர்கள், அப்பகுதியினர் திரண்டு குலசேகரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News