கன்னியாகுமரி கிறிஸ்தவ குருசடியில் திருடிய கேரளா வாலிபர் கைது

கோவளத்தில்

Update: 2024-12-20 11:01 GMT
கன்னியாகுமரியில்  உள்ள கோவளம் பகுதியில்  வேளாங்கண்ணி மாதா குருசடி உள்ளது. இந்த குருசடியில் சம்பவ தினம் யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்து அங்கிருந்த வெண்கல குத்து விளக்கை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 15 ஆயிரம் ஆகும்.      இந்த சம்பவம் குறித்து கோவளம் பங்கு பணியாளர் சுனில் என்பவர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட்  வழக்கு பதிவு செய்து நடத்திய  விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதி கருங்குந்நம் என்ற இடத்தை சேர்ந்த ஷானு ( 19) என்பவர் இந்த குருசடியில் கை வரிசை காட்டியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இன்று (20-ம் தேதி)  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News