மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

வழங்கல்

Update: 2024-12-20 04:33 GMT
உளுந்துார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டையில் சுயதொழில் பணியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.. தலைமை தாங்கி வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் டேனியல்ராஜ், கவுன்சிலர்கள் கலா சுந்தரமூர்த்தி, செல்வகுமாரி, முடநீக்கியல் மருத்துவர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பத்மநாபன், தங்க விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் மதியழகன், சக்திவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News