சங்கரன்கோவில் புதிய கழிப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
புதிய கழிப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை தென்காசி திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் இன்று காலையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் இல.சரவணன், டாக்டர் செண்பக விநாயகம், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.