பேருந்தில் பணம் திருடிய நபர் கைது

தர்மபுரியில் ஓடும் பேருந்தில் பணம் திருடியவர் கைது காவலர்கள் வழக்கு பதிவு செய்து

Update: 2024-12-20 11:20 GMT
தர்மபுரி அருகே உள்ள சின்னாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர் சின்னதுரையுடன் நகரப் பேருந்தில் இன்று தர்மபுரி நகர பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது இவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணம் 6000 ஆயிரத்தை ஒரு வாலிபர் திருடி கொண்டு ஓட முயன்றார். அவரை அந்த பகுதியில் இருந்த சின்னதுரை என்பவர் மடக்கி பிடித்தார். அதன்பின் அவரை தர்மபுரி நகர காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர் ஓசூரை சேர்ந்த சந்திரகுமார் என தெரியவந்தது. அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நகர காவலர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News