தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (20.12.2024) 2-ம் நாளாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:- திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று இரண்டாம் நாளாக இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கியதோடு, கட்டுமான பணிகளின் உறுதி தன்மையினை உறுதிப்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் பழுதடைந்த நிழற்குடையினை சீரமைத்து, நுழைவு சீட்டு எடுப்பதற்கு செல்லும் பகுதிகளை அதிகரித்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற ஆய்வுகளில் கலெக்டர் அழகு மீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.