திருப்பத்தூர் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் நகர மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களுடைய குறைகளை கேட்காமலேயே 54 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்து விட்டதாக தேசிய கீதம் பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களுடைய குறைகளை கேட்காமலேயே 54 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்து விட்டதாக தேசிய கீதம் பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர மன்ற கூட்டம் இன்று நகர மன்ற தலைவர் சங்கீத வெங்கடேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் கலந்துகொண்டனர். மன்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நகர மையப் பகுதியில் திருவுருவ சிலை, மற்றும் 100 அடி திமுக கொடி வைப்பதற்கு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அனைவரின் ஒப்புதலையும் கேட்டு பெற்றனர். மேலும் கூட்டத்தில் 36-வது வார்டு உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் அவர் பேசும்போது நாடாளுமன்றத்தில் அம்பேத்காரை இழிவாக பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து பேசினார். மேலும் இக்கூட்டத்தில் 54 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வாசிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் எழுந்து நின்ற 35 வது வார்டு அதிமுக உறுப்பினர் வினோதினி அவர் எங்களுடைய குறைகளை கேட்காமலேயே கூட்டம் முடிந்ததாக தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார். அப்பொழுது உங்களுடைய கோரிக்கையை நகரமன்ற தலைவரிடம் எழுத்து பூர்வமாக கொடுங்கள் அவர் நிறைவேற்றுவார் என வேக வேகமாக கூட்டத்தை முடிக்கும் வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கூறி உடனடியாக தேசிய கீதம் பாடப்பட்டதால் நகர மன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் நகர மன்றத்தில் நகர மன்ற உறுப்பினர் உடைய கோரிக்கைகளை கேட்காமலேயே 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி தேசிய கீதம் பாடப்பட்ட நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..