நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மோடி அரசை கண்டித்துதிருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மோடி அரசை கண்டித்தும்,நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது பொய் புகார் கூறியஒன்றிய பாஜக அரசு கண்டித்தும் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-12-21 14:03 GMT
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியும் நேஷனல் ஹரால்டு பத்திரிகையில் மோசடி செய்ததாக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்த கண்டித்தும் மத்திய பாஜக அரசின் ஏவல் துறையாக அமலாக்கத் துறையை கண்டித்து இன்று திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், ஜெகநாதன், நகரத் தலைவர்கள் ஜானகிராமன், ராஜேந்திரன், ராஜா, திலகர், மணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் காசி விஸ்வநாதன், மிலிட்டரி கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நந்தகோபால், கோபாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் பொன்னுசாமி, வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன், வட்டார நிர்வாகிகள் பெரியசாமி, செல்வராஜ், குணசேகரன், பிரபாகரன், நடராஜன் , ஜான் பாஷா, சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் சேகர், மருத்துவப் பிரிவு தலைவர் செங்கோட்டையன், இளைஞர் அணியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன் மகளிர் அணி சேர்ந்த காந்திமதி நகர நிர்வாகிகள் தியாகராஜன் வைத்தியலிங்கம் எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் முத்துச்சாமி நன்றியுரை நகர துணைத் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News