மொபைல் போனில் பணபரிமாற்றம் செய்து சூதாட்டம் 8 பேர் கைது, 17 வாகனங்கள் பறிமுதல்

குமாரபாளையத்தில் மொபைல் போனில் பணபரிமாற்றம் செய்து சூதாட்டம் ஆடியதாக 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2025-12-21 14:48 GMT
குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் குமாரபாளையம் டி.எஸ்.பி. கவுதம் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அருவங்காடு வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் 06:00 மணியளவில், வெப்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ. செந்தில்குமார், உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேரில் சென்றனர். அங்கு மொபைல் போன் மூலம் பணபரிமாற்றம் செய்து வெட்டாட்டம் எனும் சூதாட்டம் நடந்து கொண்டிருந்ததை கையும் களவுமாக பிடித்தனர். இதில் சூதாட்டம் ஆடிய ஈரோடு, பவானி, சேலம், பள்ளிபாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஜீவானந்தம், 36, சலீம், 38, திருமலைசாமி, 59, விஸ்வநாதன், 45, கோவிந்தராஜ், 48, மதன், 60, தேவராஜ், 51, ரமேஷ், 36, ஆகிய 8 நபர்களுடன் மேலும் சிலரை கைது செய்தனர். இதில் 52 சீட்டுகள் கொண்ட 3 சீட்டு கட்டுகள், நான்கு சக்கர வாகனங்கள் 9, இரு சக்கர வாகனங்கள் 8, ரொக்கம் பணம் 21 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News